நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

செவிலியர் தற்கொலை முயற்சி

திருச்சி அரசு மருத்துவமனை மாணவிகள் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:57 am IST

திருச்சி அரசு மருத்துவமனை மாணவிகள் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பெருமாள்காரன்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி சுசீலா(24). இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயிற்சி செவிலியர் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார். 
இதை கண்ட பயிற்சி செவிலியர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.