ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்? அஸ்வின் கூறுவதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இந்த இரண்டு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து...

RCB Captain Rajat Patidar and Gujarat Titans Captain Shubman Gill with the IPL trophy.

ஐபிஎல் கோப்பையுடன் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Published On :

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இந்த இரண்டு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாதில் இன்று (மே 31) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனெவே ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடைபெற்றாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியைக் காட்டிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே கோப்பையை வெல்லும் எனப் பலரும் கருதுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணி அவர்களது சொந்த மண்ணான அகமதாபாதில் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளார்கள். அகமதாபாத் அவர்களது கோட்டையாக உள்ளதால், இறுதிப்போட்டியில் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் வலுவாக உள்ளது. அந்த அணியில் நடப்பு சீசனில் புவனேஷ்வர் குமார் மற்றும் க்ருணால் பாண்டியா இருவரும் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர்.

அகமதாபாதில் விளையாடுவதால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடுகளம் குறித்து நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆர்சிபியைப் பொருத்தவரை, பந்துவீச்சு அல்லது பேட்டிங் எதுவாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பலரும் ஆர்சிபி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் எனக் கூறும் அளவுக்கு அந்த அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் அவர்கள் எப்படி விளையாடினார்களோ அதே போன்ற ஆட்டத்தை இறுதிப்போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் களமிறங்குகின்றன.

Summary

Regarding the ongoing IPL season—between Royal Challengers Bangalore and Gujarat Titans—which of these two teams has the greater chance of winning the championship title?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.