லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Sachin tendulkar

சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

Published On :

ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பாக்ட் வீரர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி, ஒரு அணி பிளேயிங் லெவனில் உள்ள எந்த ஒரு வீரருக்குப் பதிலாகவும் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட 5 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் எந்த நேரத்திலும் களமிறக்கலாம்.

இந்த இம்பாக்ட் வீரர் விதிக்கு எதிராக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு இடையூறாக இருக்கும் என ரோஹித் சர்மா விமர்சித்திருக்கிறார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அக்‌ஷர் படேலும் இம்பாக்ட் வீரர் விதி தனக்குப் பிடிக்கவில்லை என்பதை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தனிப்பட்ட முறையில் ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும் எனக் கூறுவேன். டி20 வடிவிலான ஆட்டங்களில் ஒரு அணி 20 ஓவர்கள் மட்டுமே விளையாடப் போகிறது. ஒவ்வொரு அணியிலும் உள்ள பேட்டிங் வரிசையில் கூடுதலாக ஒருவர் இம்பாக்ட் வீரராக களமிறங்கினால், பந்துவீச்சாளர்களுக்கு அது மேலும் சவாலளிக்கும் விஷயமாக மாறுகிறது. ஏற்கனெவே பந்துவீச்சாளர்கள் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் இது மேலும் சவாலை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஆட்டத்தின் சமநிலை தவறுவதாக நினைக்கிறேன் என்றார்.

Summary

Former Indian cricketer Sachin Tendulkar has stated that the 'Impact Player' rule in the IPL should be removed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.