மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தோனி சொன்னதும் செய்ததும்... சிரிப்பலையை ஏற்படுத்தும் ஷேன் வாட்சன் விடியோ!

முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி குறித்து ஷேன் வாட்சனின் வைரல் விடியோ குறித்து...

Dhoni on the Field: Shane Watson Shares Memories.

களத்தில் தோனி, நினைவுகளைப் பகிர்ந்த ஷேன் வாட்சன். - படங்கள்: ஜியோ சினிமாஸ், ஜியோ ஸ்டார்.

Published On :

முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி குறித்து ஷேன் வாட்சன் கூறியிருந்தது சமூக வலைதளத்தில் மீண்டும் டிரெண்டாகி சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப்ஸ் சுற்றுக்குத் தேர்வாகாமல் வெளியேறியது. கடந்த மூன்று சீசன்களாகவே சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்கு முன்பாகவே வெளியேறியது.

இதுவரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணியில் 2018 முதல் 2020 வரை விளையாடியுள்ளார்.

சிஎஸ்கே அணி 2018ல் கோப்பை வெல்ல ஷேன் வாட்சன் முக்கியமான காரணமாக இருந்துள்ளார். 2019 சீசனில் நடந்தது குறித்து ஷேன் வாட்சன் 2024ல் கூறியிருந்ததாவது:

நான் சிஎஸ்கேவில் சேர்ந்தபோது, எங்களது முதல் சந்திப்பில் எம்.எஸ். தோனி ‘நாம் ஐபிஎல் கோப்பை, ஃபேர் பிளே விருது இரண்டையும் பெற வேண்டும். நாம் ஃபேர் பிளே விருது வாங்குவது கடினம். ஏனெனில், நமது அணியில் ஆஸ்திரேலிய வீரர் வாட்டோ (வாட்சன்) இருக்கிறார்’ எனக் கூறினார். ஆனால், கடைசியில் தோனியே ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்தார் என வாட்சன் கூறியது இணையத்தில் மீண்டும் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் தோனி நடுவர்களுடன் விவாதம் செய்ய ஆடுகளத்தில் நுழைவார். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Shane Watson on MS Dhoni invade of cricket ground and fair play award

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.