உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின் சுவாமிகள் வீதியுலா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின்

Updated On :23 ஜனவரி 2019, 8:11 am IST

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டையில் 6 கோயில்களின் சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திங்கள்கிழமை அருள்மிகு முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.மதியம் தீர்த்தவாரிக்கு பிறகு சுவாமி, கீழவயலூர்,வடகாபுத்தூர் மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதராக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தங்கச் சப்பரத்தில் சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை அருகில் வந்து சேர்ந்தார். அப்போது, உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள அருள்மிகு பாலாம்பிகை சமேத உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், பொம்மசமுத்திரம் காசிவிசுவநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், உறையூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆகிய சுவாமிகள் ஒன்றாக சந்தித்து முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவனடியார்கள் பலரும் திருவாசகம் பாடியபடி சுவாமியுடன் வந்தனர்.பின்னர் சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டகப்படிக்கு வந்து தங்கினர். அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. அதன்பிறகு அனைத்து சுவாமிகளும் அந்தந்த கோயில்களுக்கு திரும்பிச் சென்றனர். வயலூர் சுப்பிரமணியசுவாமி அதவத்தூர் மண்டகப்படிக்கு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து வீதியுலா வந்து புதன்கிழமை அதிகாலை வயலூருக்கு சென்றார்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்  ராணி தலைமையில் கோயில் செயல் அலுவலர் சுரேஷ், கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.