தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

ஸ்ரீரங்கம் தைத்தேரோட்ட விழா: ஆளும் பல்லக்குடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வந்த தைத்தேர் திருவிழாவின் நிறைவு

Updated On :23 ஜனவரி 2019, 8:16 am IST

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வந்த தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை இரவு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார்.
கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் நடைபெற்று வந்த  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்ட விழா 20 ஆம் தேதி நடைபெற்றது. 
நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.
விழாவின நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார். இதற்காக  மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ரெங்க விலாச மண்டபத்துக்கு இரவு 7 மணிக்கு  வந்து சேர்ந்தார். பின்னர் 7.30-க்கு புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து 8 மணிக்கு  அலங்கரிக்கப்பட்ட ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளினார். ஏராளமானோர் தரிசித்தனர். 
உள் திருவீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்துக்கு 9 மணிக்கு வந்து சேர்ந்தது, அங்கிருந்து  புறப்பட்டு 9.45-க்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார்.  ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.