மணப்பாறை அடுத்த மேட்டுக்கடை அரசு டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்பனை செய்த தொகை ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 440 கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேட்டுக்கடையில் அரசு டாஸ்மாக்(எண்:10401) மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதில் மாரியப்பன், மணிவாசகம், தங்கவேல் ஆகியோர் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த கடையில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் மாதுபானங்கள் விற்பனையாவது வழக்கம்.
இந்நிலையில் சனிக்கிழமை சுதந்திர தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் ஆகியவற்றின் காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடை விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை அன்று ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 440 க்கு நடைபெற்று மது விற்பனை உள்ளது.
இதனையடுத்து இரவு மது விற்பனைத் தொகையினை கடையிலேயே வைத்து விட்டு நேற்று பணியில் இருந்த விற்பனையாளர் மாரியப்பன், மணிவாசகம் ஆகியோர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் அங்கு வந்த இரவு காவலாளி சுப்பிரமணி கடை திறந்து கிடப்பதாக கடை மேற்பார்வையாளர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியினை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு தகவல் அளித்துள்ளார்.
மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையிலான காவலர்கள் கடை விற்பனையாளர்கள், இரவு நேர காவலாளி மற்றும் அக்கம்பக்கத்தினருடன் டாஸ்மாக் கடை விற்பனை தொகை கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


