விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் முழக்கப் போராட்டத்தில் தொடங்கினர்.

News image

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்.

Updated On :17 ஆகஸ்ட் 2020, 7:38 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் முழக்கப் போராட்டத்தில் தொடங்கினர். மேலும் மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரோனா தொற்றறால் உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். கேரள மதுக்கடை நிர்வாக முறைறயை டாஸ்மாக்கில் அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 17 முதல் 21 வரை மாநில அளவில் கடை முன் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப் போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டுக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் கோரிக்கை முழக்கத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர்.  டாஸ்மாக் ஊழியர்களின் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தொமுச மாவட்ட தலைவர் மலர் மன்னன், விற்பனையாளர் சங்க மாவட்ட செயலர் மணி, ஏஐடியுசி சங்க மாநிலத்துணைத்தலைவர்(டாஸ்மாக்) ராயப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.