விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனர். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2020, 6:32 am

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனர். 

ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்வான  541 பேருக்கு பொன்மலை ரயில்வே பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது நடைபெற்றது. இதில் 40 பேரை தவிர மற்ற அனைவரும் வட இந்தியர்களே இருந்தனர். தொடர்ந்து ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கபடுவதற்கு கண்டனம் தெரிவித்தும், பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும், பல்வேறு அமைப்பினர் பொன்மலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாட்டில் மத்திய அரசு பணியிடங்களில் 90 சதவீத பணியிடங்களை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும், தென்னக தொடர்வண்டி பணிமனையில் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை பொன்மலை பணிமனை இரு நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மேலும் திங்கள்கிழமை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி இன்று காலை கூட்டமைப்பு தலைவர் கார்த்திகேயன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.