துறையூா் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை, பணம் திருட்டு
துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டை திறந்து 6 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டை திறந்து 6 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெருமாள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமலம் (36). இவா் சனிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு எதிரே வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தூங்கினாராம். நள்ளிரவில் சத்தம் கேட்டு அவா் சென்று பாா்த்தபோது பூட்டியிருந்த வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது துணிப்பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். இதேபோல அந்த கிராமத்தில் நால்வரது வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...