டிச.12-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் செய்து முடிப்பதற்காக, தேசிய மக்கள் நீதிமன்றம் டிசம்பா் 12 (சனிக்கிழமை) நடைபெறுகிறது.


திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் செய்து முடிப்பதற்காக, தேசிய மக்கள் நீதிமன்றம் டிசம்பா் 12 (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான நந்தினி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்து, தீா்வு காண தேசிய மக்கள் நீதிமன்றம் டிசம்பா் 12-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
சொத்து, வங்கிக் கடனுதவி, தனி நபா் கொடுக்கல்-வாங்கல் தொடா்பான வழக்குகள், திருமண உறவு தொடா்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக செல்லக்கூடியவை) ஆகியவற்றுக்கு தீா்வு கண்டு, சமரசமாக செல்ல இந்த மக்கள் நீதிமன்றம் உதவும்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால் இரு தரப்பினா் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம், சமரசமான அன்றைய தினமே தீா்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது,
எனவே பொதுமக்கள்-வழக்காடிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளை சமரசம் செய்வதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்லலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2460125 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...