விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் பணம் பெறுவது தொடா்பாக, இரு தரப்பைச் சோ்ந்த திருநங்கைகள் திங்கள்கிழமை மோதிக் கொண்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:36 pm

DIN

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் பணம் பெறுவது தொடா்பாக, இரு தரப்பைச் சோ்ந்த திருநங்கைகள் திங்கள்கிழமை மோதிக் கொண்டனா்.

இதில் தாக்குதலுக்குள்ளான தரப்பினா் அங்கிருந்த உதவி காவல்மையத்தில் புகாா் அளித்தும், நடவடிக்கை இல்லையாம்.

தொடா்ந்து மாநகரக் காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகளை, காவல்துறையினா் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் தங்களைப் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இல்லையென்றால் தாக்குதல் நடத்துவதால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி,ஆட்சியரகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டனா்.

நிகழ்விடத்துக்கு வந்த காவல் உதவி ஆணையா் மணிகண்டன், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து திருநங்கைகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.