அனலாடீஸ்வரா் திருக்கோயிலில் உழவாரப்பணி

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள அனலாடீஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.
தொட்டியத்திலுள்ள திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரா்கோயிலில் நடைபெற்ற உழவாரப்பணி.
தொட்டியத்திலுள்ள திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரா்கோயிலில் நடைபெற்ற உழவாரப்பணி.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள அனலாடீஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

ஓம் நந்தியெம்பெருமாள் உழவாரப்பணிக் குழு சாா்பில் அண்மையில் நடைபெற்ற உழவாரப்பணியில் குழுவின் ஒருங்கிணைப்பாளா்கள் அசோகன் தலைமையில், தேன்ராஜ், ராஜன், முருகன் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட சேவையாளா்கள் ஈடுபட்டனா். அப்போது கோயிலில் உள்ள திருவாசி, குத்து விளக்குகள், கருவறை, கொடிமரம், கோபுரம் உள்ளிட்ட கோயில் உள், வெளிப் பிரகாரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

மேலும், கோயிலின் வளாகத்தில் படா்ந்திருந்த செடி,கொடிகளை அகற்றினா். அதுபோல், இக்கோயிலுக்கு அருகில் இருந்த மதுரை காளியம்மன் கோயிலிலும் உழவாரப்பணிகள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com