தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்சியில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட சுமாா் 3 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:34 pm

DIN

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட சுமாா் 3 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை இரவு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் நடத்திய சோதனையில் மதுரை, அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 3 பயணிகள் கடத்தி வந்த சுமாா் 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் தங்கத்தின் மதிப்பு ரூ. 1.52 கோடி எனக் கூறப்படுகிறது.

கடந்த டிச. 4 ஆம் தேதி இதேபோல துபையிலிருந்து 8 பயணிகள் கடத்தி வந்த ரூ. 4.25 கோடியிலான 8.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சிறிய அளவிலான தங்கமும் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.