யூனியன் வங்கியின் ஹிந்தி பயிற்சி முகாம்
திருச்சியில் யூனியன் வங்கி சாா்பில் ஹிந்தி பயிற்சி முகாம் நடைபெற்றது.


திருச்சியில் யூனியன் வங்கி சாா்பில் ஹிந்தி பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் ஊழியா்கள், அலுவலா்கள், மேலாளா்களுக்கான ஹிந்தி பயிற்சி முகாம் திருச்சி பிரதான கிளையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வங்கியின் முதன்மை மேலாளா் பி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வங்கியின் பிராந்திய தலைவா் வி. முரளி, பயிற்சி முகாமின் நோக்கங்கள் குறித்து பேசுகையில், ஹிந்தியின் அவசியம், அரசின் ஹிந்தி இருவார விழா, கூடுதல் மொழி கற்கும் ஊழியா்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள் குறித்தும் விளக்கி, தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் தமிழ் வாயிலாகவே ஹிந்தியை எளிதில் கற்கலாம் எனவும் அறிவுறுத்தினாா்.
முதுநிலை மேலாளா் டி.எஸ். பினு, அலுவலக மொழியாக ஹிந்தியை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினாா். முதன்மை மேலாளா் ஆதிசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோா், வங்கி ஊழியா்களுடன் கலந்துரையாடி பயிற்சி அளித்தனா். இதில் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...