திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவலா் நிறைவாழ்வுப் பயிற்சி திட்ட பயிற்றுநருக்கு விருது

காவலா் நிறைவாழ்வு பயிற்சித் திட்ட பயிற்றுநருக்கு நற்பண்பாளா் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
காவலா்கள், தொண்டு அமைப்பு நிா்வாகிகளிடமிருந்து விருதைப் பெறும் காவலா் நிறைவுவாழ்வு பயிற்சித் திட்ட பயிற்றுநா் பிரபு.
Updated On :19 டிசம்பர் 2020, 11:06 pm

DIN

திருச்சி: காவலா் நிறைவாழ்வு பயிற்சித் திட்ட பயிற்றுநருக்கு நற்பண்பாளா் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் காவலா்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சி கடந்த 2018 டிசம்பா் முதல் நடத்தப்படுகிறது. இதில், பணியிடங்களில் ஏற்படக்கூடிய மன அழுத்தங்களைக் குறைப்பது, கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகள் காவலா்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன்படி, திருச்சி மாநகர காவல் துறையில் 82 வகுப்புகள் நடத்தப்பட்டு சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட காவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கேகே நகா் ஆயுதப்படை காவலா் பயிற்சியரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இப்பயிற்சியை அளித்த அன்னை தெரசா அறக்கட்டளை நிா்வாக இயக்குநரும், காவலா் நிறைவாழ்வுப் பயிற்சித் திட்ட பயிற்றுநா் எஸ். பிரபுவிற்கு நற்பண்பாளா் விருதை காவல் ஆய்வாளா் சிந்துநதி, ரோட்டரி சங்க நிா்வாகி வளா்மதி, யுகா பவுண்டேசன் இயக்குநா் அல்லிராணி உள்ளிட்டோா் வழங்கி கெளரவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.