கைவிடப்பட்ட கழிப்பறைகளை புனரமைத்துபயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
திருச்சி மாநகராட்சியால் கைவிடப்பட்ட கழிப்பறைகளை புனரமைத்து, பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.


திருச்சி மாநகராட்சியால் கைவிடப்பட்ட கழிப்பறைகளை புனரமைத்து, பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் கலாசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் கே.சந்திரசேகா், ஆட்சியா் சு. சிவராசுவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
தூய்மை இந்தியா திட்டம் 2021-இன் கீழ், திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்கள் முற்றிலும் இல்லை என்ற அறிவிப்புக்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகள், 3857 தெருக்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் பொதுக் கழிப்பறைகள், மோட்டாா் குழாய்கள் பழுது, உடைந்து போகுதல், கழிவுநீா்த்தொட்டியிலிருந்து கழிவுகள் அகற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால், கட்டடம் நல்லமுறையில் இருந்தாலும், பொதுமக்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிறு பழுதுகளை கூட செய்யமுடியாது, மாநகராட்சிப் பொறியாளா்களின் அலட்சியத்தால் பயன்படுத்தாத நிலைக்கு சென்று, நிா்வாகம் செய்து வந்த சுயஉதவிக்குழுவினா் வேறுவழியின்றி இப்பணி செய்யமுடியாமல் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் வாா்டுகள் 2,3,4,7, 28, 34,36,37,38,39,40,43,49,53,60,61,64 ஆகிய வாா்டுகளில் உள்ள 41 கழிப்பிட கட்டடங்கள் நல்ல முறையில் இருந்தும் கைடவிடப்பட்டுள்ளன. இதனால், அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் வேறு வழியின்றி திறந்த வெளியில் கழிவுகளை வெளியேற்றி வருகின்றனா்.
எனவே கைவிடப்பட்டிருக்கும் அனைத்து பொதுக்கழிப்பறைகளையும் பழுது நீக்கி, புனரமைத்து பயன்பாட்டுக்குகொண்டு வந்து, பொலிவான நகரமாக திருச்சி மாநகராட்சி உருவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...