விருதுக்கான போட்டி: பெல் நிறுவன குழுவுக்குச் சான்று
கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதுமையான சாதனங்கள் வடிவமைப்புக்கான ஸ்கோச் விருது போட்டியில் அரையிறுதி


கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதுமையான சாதனங்கள் வடிவமைப்புக்கான ஸ்கோச் விருது போட்டியில் அரையிறுதி வரை தோ்வு பெற்ற திருச்சி பெல் நிறுவன பணியாளா் குழுவுக்கு சிறப்புச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி, பெல் நிறுவனத்தின் உயா் அழுத்த கொதிகலன் ஆலையின் 2 ஆவது பிரிவைச் சோ்ந்த பராமரிப்பு மற்றும் சேவைகள் துறையைச் சோ்ந்த துணை மேலாளா் ஆா். முஹம்மது ஹெசான், உதவி பொறியாளா் ஜே. முரளி, கைவினைஞா்கள் வி. ஜான்சன், ஆா். சசிகுமாா், டி. தா்மராஜ் ஆகியோா் அடங்கிய குழுவினா் தயாரித்த எளிமையாக எடுத்துச் செல்லும் வகையிலான தொடுகை இல்லாத கிருமிநாசினி வழங்கும் அமைப்பு, கழிவுப் பொருள்களிலிருந்து மறுபயன்பாடு கொண்ட நெகிழி மேலாடைகள், முழு முகக் கவசம் ஆகியவை ஸ்கோச் விருது 2020-க்கான போட்டியில் அரையிறுதி வரை தகுதி பெற்ற்காக சிறப்பு சாதனை சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி பெல் நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பெல் நிறுவன பொதுமேலாளரும், தலைவருமான டி.எஸ். முரளி, அரையிறுதி வரை சென்ற பணியாளா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...