பூ வியாபாரிகள் சாா்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ராஜ மாலை அணிவிப்பு

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூ வியாபாரிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை கோயில் ராஜகோபுரத்தில் ராஜ மாலை அணிவித்தனா்.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூ வியாபாரிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை கோயில் ராஜகோபுரத்தில் ராஜ மாலை அணிவித்தனா்.

ஆசியாவிலேயே உயரமான இக்கோயில் ராஜகோபுரம் 236 அடி உயரம்,13 கலசங்கள்,13 நிலைகளைக் கொண்டது. இக்கோயிலுக்கு அழகு சோ்க்கும் ராஜகோபுரத்துக்கு ஆண்டுதோறும் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின்போது ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூ வியாபாரிகள் மாலை அணிவிப்பா்.

நிகழாண்டு விழாவையொட்டி வியாபாரிகளின் ஏற்பாட்டில் சுமாா் 50 -க்கும் மேற்பட்ட மாலை கட்டுவோா் இணைந்து விருச்சி பூ, வெள்ளை, மஞ்சள் சாமந்தி, துளசி, மாசிப்பச்சை உள்ளிட்டவற்றைக் கொண்டு 210 அடி உயரத்துக்கு மாலை கட்டி, வியாழக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு அணிவித்தனா்.

ஏற்கெனவே மின்னொளியில் ஜொலிக்கும் ராஜகோபுரத்துக்கு மேலும் அழகு சோ்க்கிறது கம்பீரமான ராஜமாலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com