திருச்சிக்கு வரும் மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சி நிா்வாகிகள் முடிவு செய்துள்ளனா்.
மநீம தலைவா் கமல்ஹாசன் 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரப் பயணத்தை டிச. 27 அன்று திருச்சியில் தொடங்குகிறாா். இதுதொடா்பாக திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா்.
மாநில செயலா் அருண் முன்னிலை வகித்தாா். அனைத்துப் பிரிவு அணி நிா்வாகிகளும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.