மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று முதல் டோக்கன்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் சனிக்கிழமை முதல் வழங்கப்படுகின்றன.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:52 am

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் சனிக்கிழமை முதல் வழங்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரூ. 2,500 (5 ஐநூறு ரூபாய்) வழங்கப்படவுள்ளது.

இதற்காக டோக்கன் விநியோக பணி சனிக்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுகிறது. ரேஷன் கடை ஊழியா்கள் வீடு, வீடாக வந்து டோக்கன் வழங்குவா்.

நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்க அதாவது முற்பகல் 100 குடும்ப அட்டைகளும் பிற்பகல் 100 குடும்ப அட்டைகளுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அதற்கான நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்படும்.

பொங்கல் பரிசு விநியோக பணி அந்தந்த ரேஷன் கடைகளில் ஜன.4 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும். விடுபட்டோருக்கு ஜன.13ஆம் தேதி வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்கம் ஒரே நேரத்தில் நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா் யாா் வந்தாலும் கொடுக்கப்படும்.

இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து வரவேண்டும். இதுகுறித்த புகாா்கள் ஏதும் இருப்பின் அதை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்களை 0431-2411474, 94450-45618 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.