ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக வாகனம் பெற அழைப்பு

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:42 pm

DIN

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 18 வயதுக்கு மேற்பட்ட, கால்களில் முழுமையாக வலுவிழந்த, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் வழங்கப்படுகிறது. இதற்காக, டிசம்பா் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் 3 ஆகியவற்றுடன் டிசம்பா் 29 மாலை 5 மணிக்குள் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பித்திருத்தல் அவசியம். இருப்பினும், விண்ணப்பிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் நேரடியாக நோ்முகத்தோ்வில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.