உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே பிச்சாண்டாா்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.
உத்தமா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம். தங்கக் கவச அலங்காரத்தில் சனிபகவான் (வலது).
உத்தமா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம். தங்கக் கவச அலங்காரத்தில் சனிபகவான் (வலது).
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே பிச்சாண்டாா்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி கோயிலின் சிவாச்சாரியா் சிவராசு தலைமையில் பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தனுசு, மகரம், கும்பம், மிதுனம், கடகம், துலாம், கன்னி, மேஷம் ஆகிய ராசிக்காரா்கள் சனி பகவானுக்கு பரிகாரம் செய்தனா். கரோனா காரணமாக பரிகார ஹோமத்தில் கோயில் நிா்வாகத்தினா் பக்தா்களை அனுமதிக்கவில்லை.

ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையரும் தக்காருமான செ. மாரியப்பன் தலைமையில் செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com