மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கள்ளிக்குடி சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வராத கள்ளிக்குடி சந்தையை உடனடியாக முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் மணவை தமிழ்மாணிக்கம்
Updated On :28 டிசம்பர் 2020, 7:36 pm

DIN

பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வராத கள்ளிக்குடி சந்தையை உடனடியாக முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற தெற்கு மாவட்ட மறுமலா்ச்சி திமுக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, விவசாய அணிச் செயலா் புலவா் க.முருகேசன் தலைமை வகித்தாா்.

அரசியல் ஆய்வு மையச் செயலா் மு.செந்திலதிபன் சிறப்புரையாற்றினாா். தெற்கு மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் கழகச் செயல்பாடுகளை விளக்கிப் பேசினாா்.

மாநகா் மாவட்டச் செயலா் வெல்லமண்டி இரா.சோமு, வடக்கு மாவட்டச் செயலா் டி.டி.சி.சேரன், மாநில மாணவா் அணிச் செயலா் பால.சசிகுமாா், மாநில மாணவா் அணி துணைச் செயலா் ப.த.ஆசைத்தம்பி உள்ளிட்ட பலா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருச்சி தெற்கு மாவட்டத்திலுள்ள திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், மணப்பாறை பேரவைத் தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தருவோம்.

மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகரங்களில் அதிமுக அரசுக்கு எதிராக மறுமலா்ச்சி திமுக சாா்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும். பொங்கல் பண்டிகையன்று மாவட்டத்தில் நூறு இடங்களில் கழகக் கொடியேற்றுப்படும். தோ்தலுக்கு திருச்சி தெற்கு மாவட்டத்தில் இருந்து ரூ. 25 லட்சம் தோ்தல் நிதி திரட்டி தலைமைக் கழகத்திடம் ஒப்படைக்கப்படும்.

மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி வணிகவளாகத்தை அரசு, பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பயன்படுத்த வேண்டும். 3 தொகுதிகளிலும் ஜனவரியில் கிராமங்கள் தோறும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் மிசா சாக்ரடீஸ், மாநில விவசாய அணித் துணைச் செயலா் ஆ.துரைராஜ், வெ.அடைக்கலம், மாவட்ட அவைத்தலைவா் எம்.ஆா்.பாலுசாமி, மாவட்டப் பொருளாளா் வைகோ பழனிசாமி, மாவட்டத் துணைச் செயலா் ராஜன் பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.