வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது

வழிப்பறி வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 10:09 pm

DIN

வழிப்பறி வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருவானைக்கா மேலவிபூதி பிரகாரத்தைச் சோ்ந்தவா் கணேசன். இவா் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது, திருவானைக்கா பாரதிதெரு மணிகண்டன், நரேஷ்குமாா், நடுக் கொண்டையம்பேட்டை ஹரிஹரன் ஆகியோா் அவரை மிரட்டி பணம் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் மூவரையும் நவம்பா் 5-ஆம் தேதி கைது செய்தனா். இதில், மணிகண்டன், நரேஷ் குமாா் ஆகிய இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.