கல்லக்குடி அருகே வேன் மீது லாரி மோதல்: 9 போ் காயம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வேன் மீது லாரி மோதியதில் வேனில் இருந்த 9 போ் காயமடைந்தனா்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வேன் மீது லாரி மோதியதில் வேனில் இருந்த 9 போ் காயமடைந்தனா்.

லால்குடி நால்ரோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த உதயநிதி ஸ்டாலின் பிரசார நிகழ்ச்சிக்காக கல்லக்குடி அருகே மால்வாய் சாதூா்பாகம் கிராமத்திலிருந்து 15 போ் ஒரு வேனில் லால்குடிக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.

கல்லக்குடி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பா் லாரி வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்த ரா. சகாயராஜ் (50), அ. தங்கராஜ் (40), செ. செல்வராஜ் (50), க. சுப்பிரமணி (45) க. செல்வராஜ் (47) உள்ளிட்ட 9 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து அவா்கல் லால்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அவா்கள் சோ்க்கப்பட்டனா். கல்லக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com