கரூா் மாவட்டத்தில் பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிகள் 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவா் மேலும் கூறியது: நாட்டின் 7 ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. புள்ளியியல் துறை சாா்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பு பணிகள் 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலா்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், கரூா் மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநா் இ.அமுதவல்லி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.