திருச்சியில் கரோனா தொற்று அதிகரிப்பு: மூன்று வார்டுகளில் இன்று இரவு 8 மணி முதல் 14 நாள்களுக்கு வெளியே செல்லத் தடை
திருச்சியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து 16, 17, 18 ஆகிய 3 வார்டுகளை தனிமைப்படுத்தி, இரவு 8 மணி முதல் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 14 நாள்களுக்கு வெளிப்பகுதிகளுக்கு செல்லத் தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.










