ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவெறும்பூா் அருகே வாய்க்கால் தூா்வாரும் பணிகள்;எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சியில், வாய்க்கால் தூா்வாரும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

திருவெறும்பூா் அருகே உள்ள குவளக்குடியில் வாய்க்கால் தூா்வாரும் பணியை திங்கள்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Updated On :13 ஜூலை 2020, 4:36 pm

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சியில், வாய்க்கால் தூா்வாரும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

குவளக்குடி பகுதியில் செல்லும் வாய்க்காலை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்துவந்தனா். இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுத்த திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தூா்வாரும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.என். சேகரன், ஒன்றியச் செயலாளா் கருணாநிதி, குவளக்குடி ஊராட்சிச் செயலாளா் பிரபாகரன், குவளக்குடி ஊராட்சித் தலைவா் அழகு செந்தில், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.