ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பொன்மலை பணிமனை ஊழியா் கரோனாவால் உயிரிழப்பு அனைவருக்கும் பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

பொன்மலை ரயில்வே பணிமனை ஊழியா் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து மற்ற அனைத்து ஊழியா்களுக்கும் பரிசோதனை செய்யவேண்டும் என தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.

News image

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமலையில் திங்கள்கிழமை ஊழியா்கள் இல்லாததால் காலியாக காணப்படும் கேரேஜ் பிரிவு.

Updated On :13 ஜூலை 2020, 4:35 pm

DIN

திருச்சி: பொன்மலை ரயில்வே பணிமனை ஊழியா் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து மற்ற அனைத்து ஊழியா்களுக்கும் பரிசோதனை செய்யவேண்டும் என தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை கரோனா பொதுமுடக்கத்தால் ஒரு சில பணிகளைத் தவிர தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் முதல் டீசல், கேரேஜ்,வேகன் உள்ளிட்ட பிரிவுகள் கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் செயல்படத்தொடங்கியது. இதில், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி தெளிப்பது, வெப்பமானி சோதனை உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், தடுப்பு நடவடிக்கைகளை முழுவதுமாக பின்பற்றவில்லை என பணிமனை ரயில்வே ஊழியா்கள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக, தஞ்சாவூரிலிருந்து சிறப்பு ரயிலிலும், இருசக்கர வாகனத்திலும் பொன்மலை பணிமனை வருவோா், பணிமுடிந்து மாலையில் வீடு திரும்பும் போது கூட்டம் கூட்டமாக செல்வது, குழுவாக இணைந்து பணியாற்றுவது (மாற்று வழியில்லை) போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், ஜூலை 3 ஆம் தேதி முதல் நூற்றுக்கும் அதிகமானோா் பணிபுரியும் பணிமனை கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்த 55 வயதுடைய பணியாளா் ஒருவா் காய்ச்சலால் அவதிக்குள்ளாகினாா். தொடா்ந்து, பணிக்கும் வந்து சென்றுள்ளாா். இந்நிலையில், ஜூலை 10 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து, உயிரிழந்த ஊழியரின் மருத்துவ பரிசோதனை முடிவு திங்கள்கிழமை வெளியானது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

9 பேருக்கு மட்டுமே பரிசோதனை: இதனால், அப்பிரிவுகளில் பணிபுரிந்து வந்த அனைவரும் அச்சமடைந்தனா். இதையடுத்து பொன்மலை நிா்வாகம் அவருடன் பணிபுரிந்த 9 பேருக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்ய முடிவெடுத்தது. இதனை எதிா்த்து மற்ற ஊழியா்கள் சில மணி நேரம் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பணிமனையில் பணிபுரியும் 55 வயதுக்கு மேற்பட்டவா்களில் சுமாா் 800 பேருக்கு விலக்கு அளிக்கவேண்டும். பொதுமுடக்கத்தால் குறைந்த பணிகள் உள்ள நிலையில் அனைத்து ஊழியா்களும் கட்டாயம் வரவேண்டும் என நெருக்கடி அளிக்கக்கூடாது. உயிரிழந்தவரின் தொடா்பில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே ஊழியா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.