திருச்சியில் புதை மணலில் சிக்கி 3 சிறுவர்கள் பலியானார்கள்.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் முகமதியர் தெருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் மகள் ஆசிராபானு(11), மகன் ஆசில்(8), உறவினரான ஆதாம்ஷா மகள் ரிஸ்வானா(10) ஆகியோர் சனிக்கிழமை மாலை தங்களது பாட்டி தவுலத் பீவியுடன் அப்பகுதியில் உள்ள காட்டாற்றில் சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றனர். தவுலத் பீவி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
குழந்தைகள் 3 பேரும் நீருக்குள் இறங்கி குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் 3 குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். அதிர்ச்சியடைந்த தவுலத் பீவி சத்தமிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குழந்தைகளைத் தேடினர். சிறிது நேரத்துக்கு பிறகு 3 குழந்தைகளையும் சடலமாகவே மீட்க முடிந்தது.
தகவலறிந்த சிறுகனூர் காவல்துறையினர் அங்கு சென்று 3 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிராபானு, ஆசில் ஆகியோரின் தந்தை முகமது இலியாஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


