போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

திருச்சி அருகே லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை; உணவகத்துக்கு தீ வைப்பு

திருச்சி அருகேயுள்ள பெருகமணியில் லாரி  ஓட்டுநர் ஒருவர் வியாழக்கிழமை இரவு  வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக உணவகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2020, 9:09 am

DIN

திருச்சி அருகேயுள்ள பெருகமணியில் லாரி  ஓட்டுநர் ஒருவர் வியாழக்கிழமை இரவு  வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக உணவகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

குளித்தலை வட்டம்  நங்கவரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன்  தர்மராஜ் (27). லாரி ஓட்டுநர். இவர் அண்மையில், புதுக்கோட்டையிலிருந்து  வாழைக்காய் சுமை ஏற்றி கோவை சென்றுள்ளார். திரும்பி வருகையில், பெருகமணியைச் சேர்ந்த பெ.  சரவணன் (27) என்பவருக்குச் சொந்தமான பழுதான கார் ஒன்றை, லாரியில்  ஏற்றி வந்துள்ளனர். இது தொடர்பான வாடகை கொடுப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தர்மராஜ், பெருகமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம்.

இந்நிலையில், பெருகமணி பகுதி ஆட்டோ நிறுத்தத்தில் வியாழக்கிழமை இரவு நின்றிருந்தபோது,  அங்கு வந்த மர்ம நபர்கள்  அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால்  தர்மராஜை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பேட்டைவாய்த்தலை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக, சரவணன், மற்றும் அவரது நண்பர்கள் யுவராஜ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உணவகத்துக்கு தீ வைப்பு, பதற்றம் - காவலர்கள் குவிப்பு:
 சரவணனுக்கு பெருகமணி பகுதியில் உணவகம் உள்ளது.  தர்மராஜ் கொலையான சம்பவம் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் திறண்டு வந்து பெருகமணியில் உள்ள சரவணனுக்கு சொந்தமான உணவகம், வீடு ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தியதுடன் சூறையாடினர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால்,  பெருகமணியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.