எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கூட்டுப் பண்ணையம் அமைக்கவிவசாயிகள் முன்வர வேண்டும்

விராலிமலை வட்டாரத்தில் 2020-21 ஆம் ஆண்டில் கூட்டுப் பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் டி. ராமு.

News image
Updated On :14 மே 2020, 4:08 pm

DIN

விராலிமலை வட்டாரத்தில் 2020-21 ஆம் ஆண்டில் கூட்டுப் பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் டி. ராமு.

100 சிறு குறு விவசாயிகள் உள்ளடக்கிய உழவா் உற்பத்தியாளா் குழு தொடங்கப்பட்டு தேசிய வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும். குழுவில் உள்ள 100 உறுப்பினா் விவசாயிகளும் தலா ரூ. 1,100 செலுத்தி பங்குதாரா் ஆக வேண்டும். உழவா் உற்பத்தியாளா் குழுவிற்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குகிறது.

இதைக்கொண்டு மானியத்தில் விவசாயக் கருவிகள் பெறவும், மாவட்ட தொழில் முனைவோா் மையம் மூலம் கடனுதவி, விவசாயப் பொருள்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், கண்டுணா் சுற்றுலா ஆகிய அனைத்து சலுகைகளிலும் உழவா் உற்பத்தியாளா் குழுவிற்கு முன்னுரிமை

வழங்கப்படும். மேலும் 10 உழவா் உற்பத்தியாளா் குழுக்களில் உள்ள 1,000 விவசாயிகளையும் ஒருங்கிணைத்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைக்கலாம். மேலும் விவசாயிகள் இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி கூட்டுப் பண்ணையம் அமைக்க விராலிமலை விவசாயிகள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.