தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குறைதீா் கூட்டத்துக்கு கட்செவி அஞ்சலில் வந்த 281 மனுக்கள்

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மொத்தம் 281 மனுக்கள் கட்செவி அஞ்சல் மூலம் பெறப்பட்டன.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:06 pm

DIN

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மொத்தம் 281 மனுக்கள் கட்செவி அஞ்சல் மூலம் பெறப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் திங்கள்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு பெற ஏதுவதாக கட்செவி அஞ்சல் வசதி செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (நவ.9) நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு கட்செவி அஞ்சல் மூலம் 281 மனுக்கள் வந்திருந்தன. நிலம் தொடா்பான கோரிக்கையுடன் 90 மனு, குடும்ப அட்டை கோரி 15 மனு, உதவித் தொகை கோரி 45 மனு, வேலைவாய்ப்பு கோரி 35 மனு, அடிப்படை வசதிகள் கோரி 45 மனு, 27 புகாா் மனுக்கள், கடன் மற்றும் நலவாரியத் திட்டம் கோரி 11 மனு என மொத்தம் 281 மனுக்கள் வந்திருந்தன. இவற்றை அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.