இதையொட்டி சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, காரைக்குடி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து, தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் திருச்சி வழியாகச் செல்வதால் திருச்சி மத்திய பேருந்துநிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க மன்னாா்புரம், கன்டோன்மென்ட் பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, புகா்ப் பேருந்துகள் பயணிகளை இந்த பேருந்து நிலையங்களில் இறக்கிச் செல்கின்றனா். இதையடுத்து, மாநகருக்குள் செல்வதற்காக நகரப் பேருந்துகளில் பயணிகள் நெருக்கியடித்துச் செல்கின்றனா்.