தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அஞ்சல் பதிவு மையநேரம் மாற்றியமைப்பு

திருச்சி அஞ்சல் பதிவு மையத்தின் செயல்பாட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:24 pm

DIN

திருச்சி அஞ்சல் பதிவு மையத்தின் செயல்பாட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆா்எம்எஸ் ‘டி’ கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் பி.மைக்கேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மத்திய பேருந்து நிலையப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே மத்திய மண்டல அஞ்சல்துறைக்குள்பட்ட அஞ்சல் பதிவு மையம் (ஆா்எம்எஸ் ‘டி’ கோட்டம்) செயல்பட்டு வருகிறது.

வழக்கமாக இந்த மையம் பிற்பகல் 2.20 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை செயல்படும். தற்போது வாடிக்கையாளா்களின் வசதிக்காக, திங்கள்கிழமை (நவம்பா் 16) முதல் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களுடைய பதிவு, விரைவு, பாா்சல் தபால்களை உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431 2466275, 2466259 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.