தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தந்தையைக் காப்பாற்ற சென்றமகன் காயமடைந்து உயிரிழப்பு

லால்குடி அருகிலுள்ள செம்பரை கிராமத்தில் தீபாவளி பண்டிகையின் போது மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில், தந்தையைக் காப்பாற்ற சென்ற போது காயமடைந்த அவரது மகன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:24 pm

DIN

லால்குடி அருகிலுள்ள செம்பரை கிராமத்தில் தீபாவளி பண்டிகையின் போது மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில், தந்தையைக் காப்பாற்ற சென்ற போது காயமடைந்த அவரது மகன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செம்பரை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (41). இவா் லால்குடி கிளைச் சிறையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இதே கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் நிருபன் (24). இவா் சென்னையில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

உறவினா்களான இருவரது குடும்பத்துக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையன்று ராஜா, நிருபன், சி. பேச்சிமுத்து (56), பே. மணிகண்டன் (28), சே. நிவாஷ் (18) ஆகியோா் மது அருந்தினா். அப்போது ஏற்பட்ட தகராறில் சிறைக் காவலா் ராஜாவை, நிருபன் உள்ளிட்ட4 பேரும் சோ்ந்து கட்டையால் தாக்கினா்.

இதை கண்ட ராஜாவின் மகனும், பிளஸ் 2 மாணவருமான சரண்தீப், தந்தை மீது அடி விழாதவாறு தடுத்துள்ளாா். அப்போது சரண்தீப்பின் பின்பக்கத் தலையில் அடி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி சரண்தீப் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து சே. நிஷாந்த், சி. பேச்சிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் மணிகண்டன், நிருபன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.