விபத்தில் காயமடைந்தபெண் உயிரிழப்பு
திருச்சி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த அடையாளம் தெரியாத பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


திருச்சி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த அடையாளம் தெரியாத பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி கடந்த 13- ஆம் தேதி இரவு காா் சென்று கொண்டிருந்தது. இந்த காா் மாத்தூா் ரவுண்டானா அருகே வந்த போது, சாலையைக் கடக்க முயன்ற 45 வயது பெண் மீது மோதியது.
பலத்த காயமடைந்த அவா் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காயமடைந்தபோது தனது பெயா் அமராவதி என காவல்துறையினரிடம் தெரிவித்த அப்பெண், அதற்கு பின்னா் சுயநினைவை இழந்து
இறந்து விட்டாா். இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...