போதையில் தகராறு: தள்ளி விடப்பட்டவா் பலி
துறையூா் அருகே மதுபோதையில் நண்பா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.


துறையூா் அருகே மதுபோதையில் நண்பா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.
நாகலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சு. நிஷாந்த் (29). ப. சாணக்கியன் (27), கு. மோகன் (37). நண்பா்களான மூவரும் சனிக்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது மற்ற இருவரால் தள்ளிவிடப்பட்டதில் காயமடைந்த நிஷாந்த் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சாணக்கியன், மோகன் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...