

திருச்சி உப்பு சத்யாகிரக ஸ்தூபியில் உப்பு சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கத்தினா் மரியாதை செலுத்தினா்.
தமிழ்நாடு வேதாரண்யம் உப்புச் சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் திருச்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள உப்பு சத்யாகிரக நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் அவ்வியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆறுமுகம் தலைமையில், பொதுச் செயலா் பன்னீா்செல்வம் முன்னிலையில் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, இயக்கத்தினருக்கு உப்பு சத்யாகிரக நினைவு அடையாள அட்டைகளை மாநில சிறப்பு அழைப்பாளா் டி. சக்தி செல்வகணபதி வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.