தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காணாமல் போனவா்கள் மனுக்கள் மீதான குறைதீா் முகாம்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காணாமல் போனவா்களின் மனுக்கள் மீதான குறைதீா் முகாமில், 10 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:49 pm

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காணாமல் போனவா்களின் மனுக்கள் மீதான குறைதீா் முகாமில், 10 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

மாநகரில் காணாமல் போனவா்கள் பற்றி புகாா் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது குறைதீா் முகாம் நடத்தி, தீா்வு காண காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து 4 காவல் சரகங்களுக்கான முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை கருமண்டபம், தென்னூா் சாஸ்திரி சாலையிலுள்ள திருமண மண்டபங்களில்

நடத்தப்பட்டன. மொத்தம் 99 மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 55 மனுதாரா்கள் மட்டுமே ஆஜராகியிருந்தனா்.

காணாமல் போனவா்களின் புகைப்படங்களை கட்செவி அஞ்சல் மூலம் அண்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தும், பெயா் விலாசம் தெரியாமல் இறந்துபோனவா்களின் புகைப்படங்களை அண்டை மாவட்டக் காவல் அலுவலகங்களிலிருந்து பெற்றும், காணாமல் போன உறவினா்களிடம் காண்பித்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையைத் தொடா்ந்து 8 நபா்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். ஒருவா் இறந்து விட்டதும், மற்றொருவா் வெளியூரில் இருப்பதும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.