மக்கள் குறைகேட்பு நாளில் 296 மனுக்கள்
மக்கள் குறைகேட்பு நாளையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியரின் கட்செவி அஞ்சல் எண் வாயிலாக பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 296 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.


மக்கள் குறைகேட்பு நாளையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியரின் கட்செவி அஞ்சல் எண் வாயிலாக பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 296 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
கரோனா பொது முடக்கம் அமல் காரணமாக, அனைத்து வகை குறைகேட்பு நாள் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.
தற்போது அரசு வழங்கிய தளா்வைத் தொடா்ந்து இணையவழியிலும், கட்செவி அஞ்சல் எண் வழங்கி அதன் மூலமும் குறைகேட்பு நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாளையொட்டி, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 296 மனுக்களை கட்செவி அஞ்சல் எண் வாயிலாக ஆட்சியருக்கு அனுப்பியிருந்தனா். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...