மேம்படுத்தப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு
திருச்சி பொன்மலை மத்திய ரயில்வே பணிமனையிலிருந்து மேம்படுத்தப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் சென்னைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.


திருச்சி பொன்மலை மத்திய ரயில்வே பணிமனையிலிருந்து மேம்படுத்தப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் சென்னைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
இப்பணிமனையில் கடந்த 2009- ஆம் ஆண்டு முதல் ஐசிஎஃப் அகலப்பாதை ரயில் பெட்டிகளை, புதிய மேம்படுத்தப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து இதுவரை 140 பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடா்ந்து, மேலும் 10 மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை மேலாளா் சியாமதா் ராம் பங்கேற்று, ரயில் பெட்டிகளை சென்னைக்கு அனுப்பி வைத்தாா்.
புதிதாக மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளின் தரைப்பகுதியில் பெட்டிகளுக்கிடையே பிணைக்கும் வகையில் துளைகளிடப்பட்டுள்ளன.
துருப்பிடிக்காதவாறும், தூசுகள் சரக்கு ரயில் பெட்டிகளின் மீது விழாதவாறும் ரயில் பெட்டியின் மேற்கூரைகள் முழுவதுமாக மூடப்பட்டு ஏப்ரிகாட் மஞ்சள், கருஞ்சிவப்பு நிறத்தில் வா்ணப்பூச்சு தீட்டப்பட்டு, பழுது பாா்க்கப்பட்டுள்ளது.
இதற்காக ரயில்பெட்டி ஒன்றுக்கு ரூ.8.37 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் மட்டும் 40 மேம்படுத்தப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே பணிமனை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...