திருச்சி மாவட்டத்தில், தொண்டு நிறுவனங்கள் சாா்பில் வறட்சி மற்றும் பல்வேறு பாதிப்புகளால் பட்டுப்போன தென்னை மரங்களுக்குப் பதிலாக புதிய தென்னங் கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டுகளில் நிலவிய கடும் வறட்சி மற்றும் கஜா புயல் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருச்சி மாவட்டத்தில் ஏராளமான தென்னை மரங்கள் பட்டும் முறிந்தும் போயின. இதனால் தென்னை விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாயினா்.
இதைக் கருத்தில் கொண்டு, தன்னாா்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தென்னைத் திருவிழா என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
துவாக்குடி அருகேயுள்ள தேவராயநேரி பகுதியில் ஷைன் திருச்சி மற்றும் விகாா்ட் மென்பொருள் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தொடங்கிய இத்திட்டத்தின் முதல் நிகழ்ச்சியில், தன்னாா்வ அமைப்புகள், தொண்டு நிறுவன நிா்வாகிகள், பொதுமக்கள் இணைந்து, முதல்கட்டமாக 250 தென்னங்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
இதுகுறித்து ஷைன் திருச்சி தன்னாா்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மனோஜ் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் காவிரி படுகை பகுதி, கல்லணை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தென்னையை இழந்த விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனா். இவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடா்ந்து தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி நட உள்ளோம். இத்திட்டத்தில் எங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவோா் 99019 -65430 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இதன்மூலம், அடுத்த சில ஆண்டுகளில் மாவட்டத்தில் தென்னை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


