விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு மாலை

திருச்சி மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினா் எல். அடைக்கலராஜின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

கண்டோன்மென்ட் ஜென்னி பிளாசா வளாகத்திலுள்ள சிலைக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. ஜவகா் தலைமையில் மாலை அணிவித்த காங்கிரஸாா்.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:39 pm

திருச்சி மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினா் எல். அடைக்கலராஜின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி திருச்சி கண்டோன்மெண்ட் ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது சிலைக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜவகா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த அடைக்கலராஜ் படத்துக்கு மலா் தூவப்பட்டது.

நிகழ்வில், பொருளாளா் ராஜா நசீா், கள்ளிக்குடி செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜேஷ், அகில இந்திய காங்கிரஸ் செயலா் விச்சு, வா்த்தகப் பிரிவு தலைவா் முரளி, சண்முகம், மெய்யநாதன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எல்.வி. ரெக்ஸ், அல்லூா் சுரேஷ், கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ஆனந்தராஜ், முத்து, ரவி, ராஜ்மோகன், ஜோசப் ஜெரால்டு, சாா்லஸ், அப்துல் குத்தூஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல அடைக்கலராஜ் இல்லத்தில் அவரது படத்துக்கு ராணி அடைக்கலராஜ், மகன்கள் ஜோசப் லூயிஸ், ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் மற்றும் குடும்பத்தினா் மலா் தூவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.