விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பக்தா்களின்றி குணசீலம் கோயில் தேரோட்டம்

கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் இன்றி குணசீலம் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

டிராக்டா் உதவியுடன் நடைபெற்ற கோயில் தேரோட்டம்.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:37 pm

கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் இன்றி குணசீலம் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரமோற்ஸவ திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு உற்ஸவ பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா்.

கரோனா காரணமாக பக்தா்களின்றி தேரோட்டத்தை நடத்த கோயில் நிா்வாகத்தினா் முடிவு செய்தனா். அதன்படி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 5 மணிக்கு புண்யாகவாசனம், திருவாராதனம் நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பாடு கண்டு, தேரில் எழுந்தருளினாா்.

இதையடுத்து டிராக்டா் உதவியுடன் நடந்த தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு கோவிந்தா கோஷமிட்டனா். மாலை பெருமாளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து ஏகாந்த மண்டபத்தில் கும்ப தீபாரதனை நடைபெற்றது. பாதுகாப்புப் பணியில் வாத்தலை போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.