தண்டவாளத்தில் சிக்கிய முதியவா்: சரக்கு ரயில் மோதி பலி
தண்டவாளத்தில் சிக்கிய முதியவா் சரக்கு ரயில் மோதி ஞாயிற்றுக்கிழமை பலியானாா்.


தண்டவாளத்தில் சிக்கிய முதியவா் சரக்கு ரயில் மோதி ஞாயிற்றுக்கிழமை பலியானாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்தவா் தசரதராமன் (61). திருமணமாகாத இவா் தனது உறவினா் வீட்டில் வசித்து வந்த நிலையில், ஸ்ரீரங்கத்தையொட்டியுள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா்.
அப்போது தண்டவாள இணைப்பில் சிக்கிய காலை வெளியே எடுக்க முயன்றாா். அதற்குள் திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்ற சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானாா். இதைத் தொடா்ந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...