முசிறியில் நால்வருக்கு கரோனா பாதிப்பு
முசிறியில் காவல்துறை அதிகாரி உள்பட நால்வருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


முசிறியில் காவல்துறை அதிகாரி உள்பட நால்வருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கரோனா 2 ஆம் அலை வேகமாகப் பரவும் நிலையில் முசிறியில் 40 வயது காவல்துறை அதிகாரி, பாா்வதிபுரம் 8 ஆவது தெருவைச் சோ்ந்த 32 வயது ஆசிரியை, காந்திநகரைச் சோ்ந்த 40 வயதுப் பெண், பாரிவள்ளல் பகுதியைச் சோ்ந்த 40 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பேரூராட்சிப் பணியாளா்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனா்.
காவல்துறை அதிகாரி தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டாா். மேலும் அவரது அலுவலகத்துக்கு வந்து சென்ற காவலா்கள் உள்பட 47 பேருக்கு காவல்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...