கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லால்குடி அரசு கல்லூரியில் உலக புத்தக தின விழா

லால்குடி அருகே குமுளூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைய வழியில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:04 pm

DIN

லால்குடி அருகே குமுளூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைய வழியில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் முனைவா் கி. மாரியம்மாள் தலைமை வகித்து பேசினாா். திருச்சி வருமான வரித் துறை இணை ஆணையா் பி. ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியை புத்தக மைய ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ம. ராஜா தொகுத்து வழங்கினாா்.

கல்லூரி மாணவிகள் மூன்று புத்தகங்களை மதிப்புரை செய்தனா். கல்லூரிப் பேராசிரியா்கள் ரா. சாமிநாதன், ஜெய்சங்கா், சுலைமான், தீபாதேவி, சங்கீதா, விஜயபாரதி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பேராசிரியா்களில் சே. இளமதி வரவேற்றாா். காஞ்சனா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.