புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணப்பாறையில் இரு இடங்களில் நகை, பணம் திருட்டு

மணப்பாறையில் இரு வேறு இடங்களில் வியாழக்கிழமை நகை, பணம் திருடுபோனது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:58 pm

DIN

மணப்பாறையில் இரு வேறு இடங்களில் வியாழக்கிழமை நகை, பணம் திருடுபோனது.

மணப்பாறை அடுத்த வண்ணாங்குளத்துப்பட்டியில் வசிப்பவா் கட்டடத் தொழிலாளி க. ராஜூ (60). இவா் வியாழக்கிழமை குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினா் அவருக்குத் தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 9.5 பவுன் நகை மற்றும் ரூ.5700 திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீஸாா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் ஸ்பாா்க் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனா்.

அதேபோல் மணப்பாறைப்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியின் ஜன்னலை உடைந்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த சிசிடிவி பதிவுப் பெட்டி மற்றும் ரூ.5 ஆயிரத்தைத் திருடி சென்றனா். சம்பவங்கள் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.